புதன்கிழமை, டிசம்பர் 16, 2009, 16:47[IST]
கோபன்ஹேகன்: கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற தடுப்பு மாநாட்டு அரங்கம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். வன்முறை யில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெல்லா சென்டர் ரயில் நிலையம் அருகே பேரணியாக கிளம்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கலைய மறுத்ததால் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.
போலீஸாரின் நாய்ப்படையும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
இந்த பல்லா சென்டரில்தான் புவிவெப்ப தடுப்பு மாநாடு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள், புவிவெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மாநாடு அதிகம் கவலைப்படாமல் தேவையில்லாதவை குறித்து அதிகம் பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழலியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக கோபன்ஹேகனுக்கு வெளியே உள்ள தார்ன்பி என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அவர்கள் கிளம்பினர். கிளைமேட் ஜஸ்டிஸ் ஆக்ஷன் என்ற அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கிட்டத்தட்ட 1000 பேர் வரை இதற்காக கூடியிருந்தனர்.
சௌர்சே> http://thatstamil.oneindia.in/news/2009/12/16/copenhagen-police-arrest-100-prote.html

No comments:
Post a Comment