Friday, September 25, 2009

மதுரை பிரகடனம்

காலநிலை மாற்றம் குறித்தான 15 வது உலக மாநாடு வருகின்ற டிசம்பர் 7 – 17ம் தேதி வரை நெதர்லாந்து நாட்டிலுள்ள கோபன்செகான் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா குடிமக்கள் அரங்கின் சார்பில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ள உள்ளார். அதற்கான மக்கள் அமைப்புகளின் கருத்தரியும் கூட்டம் இன்று கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொன்டனர்.

கொதிக்கும் பூமியும் விளிம்பு நிலை மக்களும்” - குடிமக்கள் உலக அரங்கு - தமிழ்நாடு, மாநில அளவிலான கருத்துப்பட்டறை, செப்டம்பர் 24, 25 – 2009

மதுரை பிரகடனம்

1. இன்றைய நடைமுறை வளர்ச்சித் திட்ட அணுகுமுறைகளே புவி வெப்பமடைய அடிப்படை காரணம் என்று இக்கருத்துப்பட்டறை உறுதியாகக் கருதுகிறது.

2. இப்புவியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிலைத்த வாழ்வாதாரங்களையும், இயற்கை சூழலையும் உள்ளடக்கிய சமூக நீதி மற்றும் அமைதிச் சூழலை வழங்க சமூக, பொருளாதார– அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்யப்பட வேண்டும் என இக்கருத்துப்பட்டறை வலியுறுத்துகிறது.

3. இக்கருத்துப்பட்டறையில் பங்கேற்ற தமிழகத்தின் பன்முக சுற்றுச்சூழலிருந்து வந்த பிரதிநிதிகள், பூமி வெப்பமடையும் நிகழ்வு பூமி கிரகத்திற்கும், அதில் வாழும் மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி வருவதை உணருகிறார்கள். பெரும் விழுக்காட்டு மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தி சிறு விழுக்காட்டு மக்களுக்கு பயன்படக்கூடிய வளர்ச்சித்திட்ட அணுகுமுறை விளிம்புநிலை மக்களின் வாழ்வாதரங்களை மிக அதிக அளவில் பாதித்துள்ளதை இக்கருத்துப்பட்டறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

4. இந்த வளர்ச்சித்திட்ட அணுகுமுறை மேற்கத்திய நாடுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு அது கிழக்கத்திய நாடுகளின் இயற்கை வளத்தை உறிஞ்சுகிறது; வெகுஜன மக்களை வறுமைக்கு உள்ளாக்கி உலகை பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளி வருகிறது.

5. திட்ட வரைவுகளிலும், முடிவெடுப்பதிலும் விளிம்பு நிலை மக்களின் கருத்துக்கள் தேச அளவிலும், உலக அளவிலும் புறக்கணிப்பது நிலைத்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும் என இக்கருத்துப்பட்டறை வலியுறுத்துகிறது.

6. காலநிலை மாற்ற பிரச்சனை இவ்வளவு தீவிரம் அடைந்ததற்கு அடிப்படை காரணம் ஒரு சிறு விழுக்காட்டினரின் மேலாதிக்கமே. தேசிய அளவிலும், உலகளவிலும் அடித்தள மக்கள் பங்கேற்கும் ஜனநாயக முறை அமுல்படுத்தப்பட்டு, இன்றைய மேலாதிக்க முறை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

7. வெகுஜன மக்களுக்கு பயன்படக்கூடிய, சமபங்கீட்டிற்கு உட்பட்ட, கரியமில வாயு கட்டுப்பாடு கொண்ட திட்டங்களாக தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அமைந்துள்ளதா என்று கீழ்மட்டத்திலிருந்து, மண்டல, தேசிய, உலகளவில் தணிக்கை செய்ய உரிய அதிகாரமும் பொறுப்புமுள்ள அமைப்பு முறை தேவை.

8. மேட்டுக்குடி - மைய, மேலாதிக்கம் கொண்ட, இன்றைய நடைமுறை வளர்ச்சி போக்கு உலகெங்கும் லஞ்சம், ஊழல், குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறை, பாதுகாப்பற்ற சூழல், அமைதியற்ற மனநிலை - இவற்றை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது ஆயுதப்போட்டியை முடிக்கிவிட்டுள்ளது. இதனால் ஆயுத உற்பத்தியிலும், உபயோகத்திலும் அதிக கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது வளிமண்டலத்தில் கரியமில வாயு அடர்த்தியை அதிகரிக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியுள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்படவேண்டிய மிகப்பெரும உலகப் பொருளாதாரம் ஆயுத உற்பத்திக்கு வீணாக்கப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என இக்கருத்துப்பட்டறை வலியுறுத்துகிறது.

No comments: