Friday, September 25, 2009

பூமி சூடாதலை தடுக்க நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டும் ய. டேவிட் அழைப்பு

செப்டம்பர் 24:

காலநிலை மாற்றம் குறித்தான 15 வது உலக மாநாடு வருகின்ற டிசம்பர் 7 – 17ம் தேதி வரை நெதர்லாந்து நாட்டிலுள்ள கோபன்செகான் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா குடிமக்கள் அரங்கின் சார்பில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ள உள்ளார். அதற்கான மக்கள் அமைப்புகளின் கருத்தரியும் கூட்டம் இன்று கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொன்டனர்.

இக்கூட்டத்தில் ஒய். டேவிட் அவர்கள் பேசியதாவது. காலநிலை மாற்றத்தினால் இவ்வுலகு ஒரு அசாதரணமான, இக்கட்டான காலக்கட்டத்தில் தத்தளித்த்துக்கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சிக்கு பிந்தைய காலகட்டத்தில் பூமியின் வெப்பநிலையில் 0.73 செல்ஜியஸ் அளவு கூடியுள்ளதாக ஐ.பி.சி.சி 4வது அறிக்கை கூறுகிறது இதுவும் கூட சரியான சரியான தகவலாக இருக்கமுடியாது. அரசு மற்றும் கம்பெனிகள் சார்பற்ற பொதுவான அறிவியல் மற்றும் சமூக ஆய்வாளர்களின் கணிப்புப்படி பூமியின் அதிகப்படியான தாங்கும் சக்தியான 2 டிகிரிசெல்சியஸ் அளவில் தற்போது நாம் 1.5 டிகிரி செல்வியஸ் அளவினை ஏற்கனவே கடந்து விட்டோம் என்பதே உண்மை. இதுவரை வெளியிட்டுள்ள பசுங்குடில் வாயுக்களின் காரணமாக 0.8 செல்ஜியஸ் வெப்பநிலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை அரசு சார்புடைய அறிஞர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இனிமேல் பூமியின் சூடு அதிகரிக்காமல் தடுக்கவேண்டிய பெருங்கடமை உலக நாடுகளுக்கு உண்டு. இதனை தவற விட்டால் பூமியை யாராலும் காப்பற்ற முடியாது. பூமியை காப்பாற்ற உலக நாடுகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது. அவசியம். அதிலும் குறிப்பாக இன்றைய சந்தையை சார்ந்த உற்பத்தி மற்றும் நுகர்வு கலாச்சாரம், அதனை தாங்கி பிடிக்கும் உலகமய கொள்கைகள் போர்க்கால அடிப்படையில் நிறுத்தப்படவேண்டும். அவை எவ்வளவு தாங்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தற்பொழுது நடைபெறும் பொருளாதார தேக்கநிலை நமக்கு உணர்த்தியுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுகள் விளிம்பு நிலை மக்களை பெருவாரியாக பாதித்துள்ளது. காலநிலை மாற்றத்தை தடுப்பதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக செயல்பட முடியும் எவ்வாறெனில் மக்களை மையப்படுத்தி கிராமப்புற, சுற்றூச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைக்கு மாறுவதன் மூலம் சாத்தியம் என்று கூறினார்.

தலைமை உரையாற்றிய குடிமக்கள் உலக அரங்கின் தமிழக தலைவர் டாக்டர். சந்தானம் அவர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகப்பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ள அமைப்புகளில் ஜனநாயகத்தன்மை மற்றும் விளிம்பு நிலை மக்களின் பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து குடிமக்கள் உலக அரங்கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முகேஷ்குமார் பகுகுணா அவர்கள் காலநிலை மாற்றத்தினால் இமயமலையின் சூழலியல் தன்மையில் ஏற்பட்டுவரும் விரும்பத்தாகத விளைவுகள் பற்றி விளக்கினார். அதனை தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் காடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நீராதாரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி முனைவர். அருணாச்சலம் அவர்கள் உரையாற்றினார். பின்னர் திரு. அசோக்ராஜா, ஆதிவாசிகளுக்கான உரிமை செயல்பாட்டாளர் அவர்கள் காலநிலை மாற்றத்தினால் ஆதிவாசிகளிளுக்கு ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத விளைவுகளை பற்றி விளக்கினார். முதல்நாள் அமர்வின் இறுதி அமர்வாக காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினர். இரவு உணவுக்கு முன்பாக காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துப்படங்கள் திரையிடப்பட்டன.

இரண்டாம் நாள் அமர்வு காலை 9 மணிக்கு துவங்கியது. அதன் முதல் அமர்வாக காலநிலை மாற்றத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ற தலைப்பில் நிலைத்த வாழ்வாதாரங்களின் கூட்டுச்செயல்பாடு (ஜாசூல்) - தமிழ்நாடு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பேசினார். இவ்வமர்வில் சூழலியல் செயல்பாட்டாளர் ஆனந்தராஜ் மற்றும் திருவேங்கடம் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் விவசாயத்தில் ஏற்பட்டு வரும் அனுபவங்கள் பற்றி உயிர்சூழல் விவசாயி ஜெயச்சந்திரன் மற்றும் முனைவர். மாரிமுத்து அவர்கள் எடுத்துரைத்தனர். இறுதியாக விளிம்பு நிலை மக்களின் குரல் என்ற தலைப்பில் ஆதிவாசி, பெண்கள், விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வினை திருமதி. சாந்தி அவர்கள் ஒருங்கிணைத்தார். ஒட்டு மொத்த இரண்டு நாள் அமர்வினை சமூக செயல்பாட்டாளர் முருகன் அவர்கள் தொகுத்து கூறினார்.

இதணை தொடர்ந்து பங்கேற்பாளர் அனைவரும் சேர்ந்து மதுரை பிரகடனத்தை தயாரித்து வெளியிட்டப்பட்டது.

இறுதியாக ஒருங்கிணைப்பாளர் வசந்தி நன்றி கூறினார். கூட்டத்தினை ஒருங்கினைக்கும் பணியினை தனராஜ் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் செய்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முனியசாமி மற்றும் சுகுமார் செய்திருந்தனர்.

No comments: