தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பல்வேறு சமூக செயல்பாட்டுக்குழுக்களின் ஒருங்கிணைப்பான சமூக செயல்பாட்டு இயக்கம் (Social Action Groups – SAM) இரண்டாவது மாநில மாநாடு பிப்ரவரி 17 – 19-ல் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி மாலை திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கல் மண்டபத்தில் மாலை சரியாக மூன்றறை மணிக்கு துவங்கியது. சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் திரு. எல். அந்தோணிசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் வரவேற்புரையாற்றினார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. கிருஷ்ணய்யர் வீடியோ கான்பாரன்ஸ் மூலம் உரையாற்றினார். மாற்று நோபல் பரிசு பெற்ற ரூத் மனோரமா, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து சமூக செயல்பாட்டு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் திரு. டேவிட் அவர்கள் மாநாட்டு விழா மலரை வெளியிட தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கத்தின் துணைத்தலைவர் செல்வி பெற்றுக்கொண்டார். பெண்ணிய செயல்பாட்டாளர் லூசி சேவியர் இன்றைய சமூக சூழலும் சவால்களும் என்ற ஆய்வறிக்கையை வெளியிட அதை தமிழக மீனவப் பெண்கள் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினர் இந்திரா பெற்றுக்கொண்டார். பெண்கள் முன்னனி பொதுச்செயலாளர் கிறிஸ்ட்டி மாநாட்டு விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட அதை தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் இடையே அவ்வப்பபோது விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல் குளறுபடிகளின் உச்சகட்ட இரண்டாம் நாள் அமைந்தான. அழைக்கப்பட்டிருந்த சிறப்பு பேச்சாளர்கள் வாரமை, அவர்களுக்கு பதிலாக பேசியவர்களின் பொருத்தமில்லாத பேச்சுகள், தலைப்புகளுக்கு சம்மந்தமில்லாத பேச்சு என பார்வையாளர்களை எரிச்சலுக்குள்ளாக்கின. அதிலும் குறிப்பாக தலித்துகள் குறித்தான அமர்வில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு பேச்சாளர் பங்கேற்காமை அதனை தொடர்ந்து பேசிய இரண்டு பெண்கள் பேச்சாளர்கள் பெண்கள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை பற்றி பேச ஒருகட்டத்தில் பொறுமை இழந்த தலித் செயல்பாட்டாளர் தலித்துகள் பிரச்சனை பற்றி பேசும் போது மற்ற விசயங்கள் பேச வேண்டாம் தலைப்பின் கீழ் பேசும்படி குரல் எழுப்பினர். அப்பொழுதும் தலித் பிரச்சனை சரியாக எடுத்து வைக்கப்படாததன் விளைவாக கடைசியில் தாங்களுக்கு இந்த அமர்வில் உடன்பாடு இல்லை என்பதை காண்பிக்கும் விதமாக வெளிநடப்பு செய்தனர்.
பெரும் பொருட்செலவில் கிட்டத்தட்ட ஒன்றறை வருடங்களாக பல தயாரிப்பு கூட்டங்கள் நடத்தி வடிவம் கொடுக்கப்பட்ட, பல்வேறு தலைப்புகளில் ஏற்பாடு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்ட நிலைப்பாடுகளை சொல்லும் அமர்வுதிஆவி என நிறைய முன்முயற்சி எடுக்கப்பட்ட மாநாடு அடைய வேண்டிய இழக்கு என்ன, அதற்கான வழிமுறை என்ன என்பதில் எந்தவிதமான தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவில்லை என்னும்போது சிறிய வருத்தமே. நிறைய செயல்பாட்டாளர் பகிர்ந்து கொண்ட விசயம் 1995 திருச்சி மாநாட்டில் பேசிய அதே விசயங்களை இன்றும் பேசுகிறோம் அதற்கு சாமின் செயல்பாடுகள் எந்தளவிற்கு ஆக்கப்பூர்வமாக இருந்துள்ளது என்பது இன்னமும் கேள்விக்குறியே என்கின்றனர்.
மாநாட்டு தீர்மானங்களை செயல்பாட்டு குழுக்களிடம் கொண்டு செல்வது, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, அதற்கு ஒரு மாற்று வடிவம் கொடுப்பது (அரசியல் வடிவம்??) என்ற தொடர்பணிகளில் எவ்வளவு தூரம் கடந்த 13 வருடங்களில் முனைப்புடன் இருந்துள்ளோம் என்ற சீர்தூக்கி பார்க்கும் முயற்சிகள் இல்லாத மூன்று நாள் திருவிழாவாக முடிந்து போனது.
மாநாட்டு நிகழ்வுகளை பற்றிய மேலாதிக விபரங்களுக்கு
நிழல்படங்கள்:http://picasaweb.google.co.in/jasul.tn/2ndStateLevelSAMConferenceAtDindugal
மாநாட்டு கலைக்குழு
#
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment