Monday, February 16, 2009

இது யாருக்கான பட்ஜெட்?

இந்த இந்திய துணைக்கண்டத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ஒரு சிறிய தரப்பினரை (3 முதல்5 சதம்) பிரதிநிதித்துவப்படுத்தும் ஒளிரும் இந்திய முகம், மற்றொன்று ஒருநாளுக்கு 20ரூபாய்க்கும் கீழாக சம்பாதிக்கும் 26% சதவீதத்தினரை உள்ளடக்கிய பாரத தேசம். இந்த பாகப்பிரிவினையை கடந்த 1995 களிலிருந்து உலகமயமாக்கல் பின்னணியில் அதிகரித்துகொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். இந்த பிண்ணனியில் பார்த்தால், ஆளுகின்ற கட்சிகளின் முதல் 4 ஆண்டு பட்ஜெட்கள் ஒளிரும் இந்திய தேசத்தவர்களுக்கும், தேர்தல் நடைபெறும் 5வது வருட பட்ஜெட் பாரத தேசத்தை சேர்ந்தவர்களுக்கு போடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வருட பட்ஜெட் எந்த ரகத்தை சேர்ந்தது என்பதே இங்கே கேள்வி. ஏனெனில் இந்திய தேசத்தின் கனவு நிதிஅமைச்சர் தன்னுடைய தேல்விகளுக்காக வேறு இலாகா மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்தில் அவரின் பிதாமகரும் உலக வங்கியின் முன்னாள் சேவகரும் இன்றைய இந்திய, பாரத தேசங்களின் பிரதம மந்திருமான மன்மோகன் உள்ளார். அவரும் இதய அறுவைசிகிச்சையென ஆஸ்பத்திரியில் படித்திருப்பதால் 25 வருடங்களுக்கு முன்பு திருமதி. இந்திராகாந்தி தலைமையில் கலப்பு பொருளாதார கொள்கையில் பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் நிதிஅமைச்சார் இந்நாள் நம்பர் 2 , பிரதமர் பொருப்பை தற்காலிகமாக கவனிப்பவருமான திரு. பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் எப்படி:

சந்தேகமே இல்லை வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என நினைக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆசையை வெளிக்காட்டும் பட்ஜெட் தான். ஆனால் ஆசைப்பட்டது எல்லாம் நடக்குமா என்றால் அது கனவுதான். ஆனால் நிச்சயமாக சிதம்பரம் செட்டியாரின் பட்ஜெட்டிற்கும் பிரணாப்பின் பட்ஜெட்டிற்கும் சிறிதளவு வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. ஏனென்றால் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின், சிதம்பரம் செட்டியாரின் வர்க்த்தினரின் (பங்குசந்தை தரகர்கள்) தொந்திக்கு சற்று கசப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. .

ஒளிரும் இந்திய தரப்பினரின் ஏமாற்றம்:

இந்த பட்ஜெட்டில் தொழில்துறைக்கோ, வங்கித் துறைக்கோ அல்லது வருமான வரி தொடர்பாகவோ எந்தவிதமாக அறிவுப்புகளும் இல்லை. இந்த அறிவிப்புகள் இல்லாததால் இன்று பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. பட்ஜெட் தாக்கலாகிக் கொண்டிருந்தபோதே அதில் ஒன்றுமில்லை என்பது தெரியவந்ததால், சென்செக்ஸ் 308 புள்ளிகள் சரிந்து 9326.75 என்ற அளவைத் தொட்டது.

முன்னதாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைக்கு பட்ஜெட்டில் பெரிய அளவில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியதால் அந்த பங்குகளின் விலைகள் உயர்ந்தன. ஆனால், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை படித்தபோதே அதிலிருந்த 'நிதர்சனம்' இந்தப் பங்கு விலைகளை சரியச் செயதது. அதே போல வங்கி, பெட்ரோலியம், இரும்பு-எஃகு, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளின் பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டன.

பட்ஜெட் படிக்கப்பட்டபின் மும்பய் பங்கு சந்தையில் ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை சார்ந்த விதை, உரம் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலைகள் மட்டும் உயர்ந்தன. இதில் காவேரி சீட்ஸ், மோன்சான்ட்டோ இந்தியா விதை நிறுவனம், ஏரிஸ் அக்ரோ ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

அப்படியென்றால் இது பாரத குடிமக்களுக்கான பட்ஜெட்டா?:

அப்படியானால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அதன் தலைவி திருமதி. சோனியாவும் நினைப்பதுபோல இது கிராமப்புற, சிறு குறு விவசாயிகள், விவசாய கூலிகளுக்கான பட்ஜெட் தானா?. இந்த பட்ஜெட்டின் மீதான பாரத மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது. ஏற்கனேவே தற்கொலை செய்து கொண்ட, கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிக்கொண்டு இனி தற்கொலைக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கின்ற மானாவாரி சிறு, குறு, விவசாயிகள் தாங்கள் வாழ்கைக்கு ஒரு விடிவு கிடைக்காத என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளதாக செல்லப்படுகின்ற இந்த தேர்தல் பட்ஜெட்டின் சில அமசங்கள் வருமாறு.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒதுக்கீடு விபரம்

பாரத தேசத்தவனின் புரிதலில் இந்த பட்ஜெட் திட்டங்கள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு 200910 ஆம் ஆண்டில் ரூ.6705 கோடி வழங்கப்படும்.

எத்தனை காலத்துக்கு உலக வங்கி காசில் கஞ்சி ஊத்துவிங்க. கஞ்சி அவரவ வீட்டுல தயார் செய்ய அதாங்க அடிப்பெரிய வைக்க உறுப்படியா யோசிங்க.

சர்வ ஷிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,100 கோடியாக உயர்த்தப்படுகிறது

உலக வங்கிகாரன் காசில் ஆரம்ப கல்வியை மேம்படுத்துரோம்னு சொல்லிட்டு ஊருக்கு ஊரு கட்டிடம் கட்டிட்டு திரியிறிங்க. கேட்டா செயல்வழி கற்றல்னு புருடா வேறா. என்னத்த சொல்ல. இதுக்கு பின்னாடி எத்தனை கிராமப்பள்ளிக்கூடங்களை உலக வங்கி ஆணைப்படி மூடினீங்கன்னு கணக்கெடுத்தால் தான் தெரியும்.

ராஜீவ் காந்தி கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 2009 - 10ல் ரூ.7400 கோடி ஒதுக்கப்படும்

ஆக பொதுசனங்களே இத்திட்டத்தின் பேராள பங்குத்தொகை கட்ட தயார் ஆகிக்கங்க. பயன்படுத்துபவர்கள் பங்குத்தொகை கட்டனும்னு உலக வங்கி ஏற்கெனவே சொல்லிட்டுள்ள.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.30,100 கோடி ஒதுக்கப்படும்

ஏதோ இந்த திட்டத்தினால கால்வய்த்து கஞ்சிக்கு வழி இருக்கு. ஆனா அந்த 80 ரூபாய் கூலியை எப்பத்தான் தரப்போறங்கன்னு தெரியல.

கிராமப்புற வளர்ச்சி, ரெயில்வே, நெடுஞ்சாலை துறை, சாலை போக்குவரத்து மற்றும் ஐடி ஆகிய துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உயர்த்தப்படுகிறது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

200910 ஆண்டுக்கான பட்ஜெட் செலவு ரூ.9,53,231 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட செலவுகளுக்கான ரூ.2,85,145 கோடியை இது உள்ளடக்கியது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

நிதி பற்றாக்குறை ரூ.1,33,287 கோடி என்று மதிப்பிடப்பட்டதி லிருந்து ரூ.3,26,515 கோடியாக அதிகரித்துள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்ள வரிச்சலுகைகளாக ரூ.40 ஆயிரம் கோடி அறிவிக்கப் பட்டுள்ளது

சத்தியம் மாதிரி நாட்டுக்கு 24 மணி நேரமும் சேவையாற்றிய நிறுவனங்களுக்கு இந்த பணம் பயன்படும் என நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மறந்திடாம நம்ம மட்டையடி மன்னன் தெண்டுல்கர் அடிச்ச பெயில் அவுட் பாக்கேஜ் பணம் எவ்வளவு இன்னு தெரிஞ்சுக்க பிற்சேர்க்கையில இருக்கிற லிங்கை சொடுக்குங்க.

2008 ஆம் ஆண்டில் மதிப் பிடப்பட்டதை விட வரி வசூலிப்பு ரூ.60 கோடி குறைந்துள்ளது

காந்தி கணக்கு

200809 ஆம் ஆண்டில் உர மானியம் ரூ.14 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.44 ஆயிரத்து 863 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

இந்தியாவில உரஉற்பத்தி செய்த கம்பெனிகள் இழுத்து மூட்டப்பட்டு அவற்றின் பெயரில் இறக்குமதி நடப்பதாக கேள்விப்பட்டேன்.

பொதுத்துறை நிறுவனங்களின் வாராக்கடன்கள் 2007ல் 7.8 சதவிகிதமாக இருந்ததிலிருந்து கடந்த ஆண்டு 2.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் விற்றுமுதல் ரூ.10,87,000 ஆக உயர்ந்துள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

மாணவர்களுக்கான கல்விக்கடன் ரூ.24,260 கோடியாக கடந்த 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது

சிதம்பர ரகசியம் போங்க

2008 ஆம் ஆண்டு 6 புதிய ஐஐடிகள் செயல்பட தொடங்கின. இந்த ஆண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இரண்டு புதிய ஐஐடிகள் செயல்பட தொடங்கும்

எப்ப இடஓதுக்கீட்ட அமல்படுத்த போறிங்க.

கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் விரிவுபடுத்தப்படும்

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

இந்திரா ஆவாஸ் யோசனா திட்டத்தின் கீழ் 60.4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

கொடுக்கிற 45 ஆயிரத்துக்கு 5000 மேல செலவு இருக்குன்னு கேள்வி

கோதுமைக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.630லிருந்து குவிண்டாலுக்கு ரூ.1080 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது

நெறைய கொள்முதல் நிலையங்கள தெரங்க. அதவிட்டு வெத்து அறிவிப்பு மட்டும் கொடுத்த ஓட்டு எப்படி போடுவோம்.

விவசாயிகளுக்கான கடன் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.65,300 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

அய்யா எனக்கு பேங்குள லோனு வாங்கற வழி சொல்லுக்கொடுங்கையா. வெளிக்கடன் ஏற்கனவே மன்னைய புடிக்குது.

விவசாயத்திற்கான திட்ட ஒதுக்கீடு 300 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

15 புதிய மத்திய பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்படும். விஜயவாடா மற்றும் போபாலில் கட்டிடக்கலை, பள்ளிகள் அமைக்கப்படும். 6 புதிய ஐஐஎம்கள் செயல்பட தொடங்கும்

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

ஜனவரியில் பணவீக்கம் 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ஏற்றுமதி 17.1 சதவிகிதம் குறைந்துள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராமப்புற சாலைகளுக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஏற்படுத்தப்படும்

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

இந்திய உள்கட்டமைப்பு நிறுவனம் திட்டங்களின் 60 சதவிகிதத்திற்கு மறுமுதலீடு செய்யும்

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

கடந்த 3 ஆண்டுகளில் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதலீட்டு விகிதம் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

7 முதல் 8 சதவிகித பொருளாதார வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 730 கோடியாக உயர்வு

யாரை சுடப்போறிங்க – நக்சலைட்டுங்களயா? இல்ல எல்லை தாண்டிய தீவிரவாதிங்களயா? இல்லா வீணாப் போன இலங்கை தமிழர்களையா?

பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ.40 ஆயிரத்து 900 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ராஜாக்கள் காலத்துல கட்டின ஏரி, குளங்களை தூர்வர வக்கில்ல நீங்க என்னத்த கடந்த 5 வருசமா நிர்மாணம் பண்றிங்கன்னு தெரியல

ஐடிஐ நிறுவனங்களில் விதவைகளுக்கு இலவச பயிற்சி

காத்துல வெண்ணை எடுக்கிற சமாச்சாரம் தான் போங்க

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு உயர்வு

ஆரம்ப கல்வி அதாகளப்பட்டு போய்க்கிட்டுருக்கு. காசிருந்தவனுக்கு கல்வின்னு ஆயிட்டு. என்ன படிக்காதங்க நாட்டை ஆண்டப்ப நள்ள இருந்த நாடு இப்ப ஆக்போர்டு ஆளுங்க கையில மாட்டிக்கிட்டு சந்தி சிரிக்கிது.

வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 12 மில்லியனாக அதிகரிக்க இலக்கு

புரிய மாட்டென்னுது. புரிஞ்சா சொல்லுங்க

உணவு உற்பத்தியை ஊக்குவிக்க 25 புதிய திட்டங்கள்

எத்தனை மலட்டு விதைக்கு அனுமதி கொடுக்க போறிங்க. எவ்வலவு ஏக்கர் நெலத்த கம்பெனிகளுக்கு கிரையம் பண்ணப்போறிங்க.

உணவு உற்பத்தி திட்டங்களில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு


பிற்சேர்க்கைகள்:

(பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் - http://www.maalaisudar.com/newsindex.php?id=26521%20&%20section=1 )

சச்சினுக்கு கோடிகளை வாரியிறைத்த பேங்க் ஆப் ஸ்காட்லாந்து - http://thatstamil.oneindia.in/news/2009/02/16/business-sachin-co-bailed-out-for-rs-1600-crore.html

No comments: