கடந்த ஜனவரி 27 லிருந்து பிப்ரவரி 1ம் தேதிவரை நடைபெற்ற உலக சமுக மாமன்ற கூட்டம் பிரேசிலின் பீலாம் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய குடிமக்கள் அமைப்பின் சார்பில் அதன் தேசிய தலைவர் திரு. ஒய்.டேவிட், அவர்கள் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவத்தை பீல் பணியாளர் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் சாரம்சம்.
இந்த உலக் சமுக மாமன்ற கூட்ட்த்தின் முக்கிய நோக்கம் வருடாவருடம் கூடும் உலக் பொருளாதார அமைப்பு மாநாட்டுக்கு எதிராக உலக மக்கள் சார்பில் கூடும் அமைப்புதான் உலக சமுக மாமன்றம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இம்மாநாடு கூடும். நாட்டளவில், வட்டார அளவில் எப்பொழுது வேண்டுமானாலும் கூடும்.
இம்மாநாடு நடைபெற்ற இடம் உலக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் உலகத்தின் நுறையீரல் என பேற்றப்படும் அமேசான் காடுகள் மற்றும் ஆறு, அங்கு வாழும் பூர்வகுடிமக்கள் பிரச்சனைகள் என அமேசன் பிரச்சனையை பற்றி உலகம் புரிந்து கொள்வதற்காக இந்த மாநாடு இங்கு கூட்டப்பட்டது.
200 க்கும் மேற்பட்ட தலைப்புகள் இருந்தால்கூட அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் என பார்த்தால் முன்னிறுப்பது ஆதிகுடிகளின் நிலம் சார்ந்த பிரச்சனை, உலக பொருளாதார நெருக்கடி, மற்றும் பூமி சூடாதல்
1. ஆதிவாசிகள் பிரச்சினை:
ஆதிவாசிகளின் கலாச்சார, பொருளாதார, வாழ்வாதார உரிமைகள் பேசப்பட்டாலும் பிரச்சனைகளின் அடிப்படை நாதம் நிலம் சார்ந்த பிரச்சனைகள் முக்கிய இடம் பெற்றது. இது உலக அளவில் ஆதிவாசிகளுக்கு உள்ள பிரச்சனை ஆக உள்ளது.
2. உலக பொருளாதார நெருக்கடி:
உலக பொருளாதார நெருக்கடி சார்ந்த பிரச்சனைகள் பற்றி அதிக அமர்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் உலக கிருத்தவர்கள் பேரவை (WWC) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த அமர்வுகளில் பேசப்பட்ட விசயங்களின் சாரம்சம் முறையே
- இன்றைய பிரச்சனைகளின் அடிநாதம் தொழிலாளர் வேலை இழப்பு, தொழில் நிறுவனங்கள் மூடுதல்
- இந்த நிறுவனங்களை / கம்பெனிகளை மீட்டெடுக்க அரசாங்க பணத்தை கொட்டுதல்
- இந்த ஆண்டு கூடிய G 8 மாநாடு கூட கம்பெனிகளை மீட்டெடுப்பது அவற்றை மருஉருவாக்கம் செய்வது அதுவும் இந்த முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்குள் இந்த மாற்றங்களை செய்வது என முடிவு எடுத்துள்ளன.
- இந்த கம்பெனிகள் மீட்டெடுப்பிற்கு ஏன் பொதுத்துறை பணம் செலவளிக்க வேண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
- ஏன் இந்த பிரச்சனைகள் பற்றி G8, G20 மற்றும் பேசுகின்றன? ஏன் ஐ.நா. சபையில் இது பற்றி விவாதிக்கப்படவில்லை? உலக வங்கியை ஏன் மாற்றி அமைக்ககூடாது? இந்த பொருளாதார கொள்கையை ஏன் மாற்றகூடாது?
- இதுவரை கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டு பணம் தொழில்களை மறு உருவாக்கம் செய்ய பயன்படவில்லை.
3. உலகு வெப்பமயமாதல்
நிறைய அரங்குகள் உலக வெப்பமயமாதல் பற்றிய பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. இந்த அரங்குகளில் விவாதிக்கப்பட்ட விசயங்களில் மிகமுக்கியமானது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2009 க்கான ஹோபன்செகன் மாநாட்டிற்கு எவ்வாறு மக்கள் அமைப்புகள் தயார் ஆவது என்பதற்கான விசயங்கள் அதிகம் பேசப்பட்டது. நாமும் கூட இதைப்பற்றி சிந்திப்பது அவசியம்.
இது தவிர்த்து உலக ஆன்மிக தலைவர்கள் மாநாடு, இனரீதியான ஒதுக்கீடு தொடர்பான விசயங்கள், பாலஸ்தீன பிரச்சினை என 200க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடந்தேறின.
இக்கூட்டத்தில் ஜோதிமணி, வசந்தி, வர்த்தினி, மரியசெல்வம், ராஜா, முருகேசன், சுகுமார், தனராஜ், நாகலிங்கம், நாதன், மற்றும் மாரிராஜன் அகியோர் கலந்து கொண்டனர்.
மாரிராஜன்.தி
No comments:
Post a Comment