செவ்வாய்க்கிழமை, ஜூலை 13, 2010, டெல்லி: ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான மக்கள் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.
2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.
ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.
இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.
உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.
5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்
Source: Thats tamil.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment